பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் பலரும், கதை இத்துடன் முடிவதால் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு இல்லையென்றே கருதினார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்கான க்ளைமாக்ஸ் காட்சியையும் தான் உருவாக்கி விட்டதாகவும் கூறி ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-3க்கான க்ளைமாக்ஸை உருவாக்கிவிட்டேன் அதை மோகன்லாலிடமும், தயாரிப்பாளரிடமும் அதை கூறியபோது அவர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனார்கள். அதேசமயம் இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் நடக்கும்.. அதற்குள் இன்னும் பல விஷயங்களை படத்திற்காக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.




