மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் நடித்துள்ள 'பொகரு' படம் கடந்த பிப்-19ஆம் தேதி வெளியானது. நடிகர் அர்ஜுனின் உறவினரான துருவ் சார்ஜா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் தமிழில் செம திமிரு என்கிற பெயரில் வெளியானது.
இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது என்றாலும் படத்தில் பிராமண சமூகத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமான காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக கூறி கர்நாடகாவில் பிராமண சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கர்நாடக பிலிம் சேம்பர் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதற்கு சம்மதித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தா கிஷோர்.