'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? |
ஹம்சஹர்ஷா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் நின்று கொல்வான். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மும்மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி இயக்கியுள்ளார் வி பி சங்கர். அர்ஜூன் சந்த்ரா, கருணா டோக்ரா, யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, கீதா, நிழல்கள் ரவி, ராஜீவ் பிள்ளை மற்றும் பவித்ரா லோகேஷ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜூடா சாண்டி இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வி.பி.சங்கர் கூறியதாவது: ஒரு பணக்கார இளைஞன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் ஒரு கர்நாடக இசை குடும்பத்தை சார்ந்த பெண்ணை காதலிக்கிறான். மகனின் காதலை பற்றி தெரிந்த இளைஞனின் தந்தை அவர்களின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.
இந்நிலையில் இசைக் கச்சேரிக்காக கதாநாயகி தனது தாயுடன் கோவா செல்ல, அங்கு கதாநாயகி கடத்தப்படுகிறார். நாயகன் நாயகியை கடத்தல் கும்பலிடமிருந்து கண்டுபிடிக்க முயல பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. இறுதியில் வென்றது யார் என்பதை விறுவிறுப்பான முறையில் படமாக்கி இருக்கிறோம். என்றார்.