'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ சமூகவலைதளத்தில் எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் நடிகர் வடிவேலு. கடந்த பத்தாண்டுகளாக அவர் நடிக்காத போதும், அவரது புகைப்படங்கள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல் டைம் பேவரைட். இதனாலேயே எப்போதும் சமூகவலைதளங்களில் வடிவேலுவின் புகைப்படத்தை பார்க்க முடியும்.
இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது வைரலானது. “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என அவர் உருக்கமாகப் பேசியது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது.
விரைவில் அவர் சூர்யா நடிக்கும் படம் மற்றும் திருமுருகன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையானால் நிச்சயம் மீண்டும் வடிவேலு பிஸியாகி விடுவார் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை மீரா மிதுன், வடிவேலு பற்றி பேசியிருக்கிறார். அதில், 'வடிவேலுவின் பேச்சு உருக்கமாக இருந்ததாகவும், தான் விரைவில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும், விருப்பமிருந்தால் அதில் அவர் நடிக்கலாம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது” எனவும் அவர் கூறியுள்ளார்.