நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
தேர்ந்தெடுத்த கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. விஜய் படத்தில் நடித்தால் அடுத்த லெவலுக்கு சென்று விடலாம் என்று மாஸ்டர் படத்தில் நடித்தார். ஆனால் கதைக்கு முக்கியமான வேடம் என்று சொல்லி தன்னை டம்மி பண்ணி விட்டதாக சினிமா வட்டாரங்களில் தற்போது புலம்புகிறாராம் ஆண்ட்ரியா. தற்போது அவர் கைவசம் மிஷ்கின் இயக்கும் பிசாசு- 2, தில் சத்யா இயக்கும் மாளிகை மற்றும் கா படங்கள் மட்டுமே உள்ளன. வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. வரும் வாய்ப்புகளும் தனக்கு முக்கியத்துவம் இல்லாதது போன்ற வேடங்களே வருகிறதாம். ஆகவே, இனிமேல் ஆரம்ப காலத்தைப் போலவே தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.