கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி | கொரோனா சூழலிலும் 'கிளாமர்' போட்டோக்களைப் பதிவிடும் நடிகைகள் | அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் | ரேஷ்மாவின் புதிய தொடர் அபி டெய்லர்ஸ் | 3வது குழந்தை பெற்றால் சிறை: கங்கனா அதிரடி | சினிமாவில் பிசியாகும் சிவாங்கி |
உடல் எடையைக் குறைத்து மீண்டும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. மிகக் குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து அதனை ரிலீஸும் செய்து விட்டனர். அப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஈஸ்வரனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்தப் படத் தகவல் உண்மையா என்பது தெரிய வரும்.