ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
புதுடில்லி: புகழ்பெற்ற இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் பா.ஜ.,வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி திரைப்படங்களில் டிஸ்கோ டான்சர் நடிகர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
விரைவில் மே.வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரசை வீழ்த்துவதற்காக பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்,ஏக்கள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.,கட்சியின் மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில் மிதுன் வங்காளத்தில் மிகவும் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.,வில் சேர விரும்பினார் வரவேற்கப்படுவார். என தெரிவித்துள்ளார்.