மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
களவாணி படத்தில் நாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. ஆனபோதும் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய ஓவியா, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். அதன்பிறகு களவாணி-2 உள்ளிட்ட சில படங்ளில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்ததையொட்டி சோசியல் மீடியாவில் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரன்டிங் ஆனது. அதை யடுத்து ஓவியாவும் தனது டுவிட்டரில் கோ பேக் மோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் நடிகை ஓவியாவிற்கு எதிராக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இனிமேல் ஓவியா எப்போது சென்னை வந்தாலும் அவருக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கவும் பாஜகவினர் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.