ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் |
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் 'கனா'.
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 'வாயடி பெத்த புள்ள' பாடல் அதிக வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதனாவுடன் இணைந்து பாடியதே அதற்குக் காரணம். ஜிகேபி எழுதிய அப்பாடலை வைக்கம் விஜயலட்சுமியும் இணைந்து பாடியுள்ளார்.
யு டியுபில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான அதன் லிரிக் வீடியோ தற்போது 200 மில்லியனைக் கடந்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் 200 மில்லியனைக் கடந்த மூன்றாவது பாடல் இது. 'ரவுடி பேபி' பாடல் 1000 மில்லியன்களைக் கடந்து முதலிடத்திலும், 'ஒய் திஸ் கொலவெறி' 267 மில்லியன்களைக் கடந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'ஒத்தையடிப் பாதையிலே' பாடல் ஏற்கெனவே 100 மில்லியன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது மகளுடன் இணைந்து பாடிய பாடல் 200 மில்லியனைக் கடந்துள்ளதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.