கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? |
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பிற்கு செல்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66ஆவது படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கிடையே விஜய் 66ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்று விடவேண்டும் என்பதற்காக அட்லி, எச்.வினோத், அஜய் ஞானமுத்து உள்பட மேலும் சில இயக்குனர்களும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் யாருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லோகேஷ் கனகராஜைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமாருக்கு விஜய் கால்சீட் கொடுத்ததை அடுத்து தற்போது ஓரிரு ஹிட் படங்களை கொடுத்த அனைத்து இளவட்ட இயக்குனர்களின் கவனமும் விஜய் பக்கம் திரும்பியிருக்கிறது.
அதேசமயம் ஒரு படத்தை முழுமையாக முடித்த பின்னர் தான் தனது அடுத்தப்பட அறிவிப்பை விஜய் வெளியிடுவார். அந்தவகையில் இவரின் 66வது படம் பற்றிய அறிவிப்பு இப்போதைக்கு இருக்காது என்கிறார்கள்.