சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷும் மாளவிகா மோகனனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.