சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
டிக் டாக்கில் கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்த இலக்கியா இப்போது நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். துரைராஜ் இயக்கும் இப்படத்தில் அருண்குமார் நாயகனாக நடிக்க இவர்களுடன் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி ஆகியோர் நடிக்கிறார்கள். அடர்ந்த காடுகளில் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. துரை ராஜன் இசையமைக்கிறார்.
"தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை. வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரையில் வெளியாக உள்ளது''. என்கிறார் இயக்குனர் துரைராஜ்.