'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பெண் இயக்குனர் ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படம் நாளை(பிப்., 12) வெளிவருவதாக இருந்தது. ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் விதித்த நிபந்தனையால் பட வெளியீட்டில் சிக்கல் நீடித்தது. அதாவது தியேட்டரில் வெளியான 14 நாட்களுக்கு பிறகு ஓடிடியிலும் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இப்படம் பிப்., 28ல் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது.
இதுப்பற்றி படக்குழு வெளியிட்ட அறிக்கை : “ஏலே” திரைப்படம் தியேட்டரில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் தியேட்டர்களை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு, உலகதொலைக்காட்சிகளில் முதல் முறையாக, நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம். திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும், ரசிகர்களுகான தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டரில் படங்கள் வெளியான பிறகு சின்ன படங்கள் என்றால் 30 நாட்களும், பெரிய படங்கள் என்றால் 50 நாட்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். புதிதாக இப்போது இது மாதிரியான ஒப்புதலுக்கு சம்மதம் சொன்னால் தான் படத்தை வெளியிடுவோம் என கூறி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச்சூழலில் தான் இந்தப்படம் கடைசியாக தியேட்டரும் வேண்டாம், ஓடிடியும் வேண்டாம் என நேரடியாக தியேட்டரில் வெளியிடும் முடிவுக்கு தயாரிப்பாளரை கொண்டு வந்துவிட்டது.