கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி வெற்றியைப் பெற்றது. பின்னர் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியானது. இரு தினங்களுக்கு முன்பு இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை யு டியுபில் வெளியிட்டார்கள். 4 நிமிடம் 49 வினாடிகள் இருக்கும் காட்சி அது.
படத்தில் கல்லூரி மாணவியாக நடித்த கவுரி கிஷனிடம் மாணவர்கள் சிலர் தவறாக நடந்து கொள்ள அது சம்பந்தப்பட்ட விவாதக் காட்சி ஒன்று கல்லூரி முதல்வர் அறையில் நடைபெறுகிறது. கவுரிக்கு ஆதரவாக விஜய் பெண்கள் ஆடை அணிவது பற்றி மிகவும் சீரியசாகப் பேசும் காட்சி அது. அப்படிப்பட்ட காட்சியில் சரியாக 59, 60வது வினாடியில் பக்கத்தில் நிற்கும் அவரது பெற்றோர்களைப் பார்த்து சிரிக்கிறார். சீரியசான காட்சியில் கவுரி அப்படி சிரித்த காரணத்தால் தான் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
நீக்கப்பட்ட அந்தக் காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் படத்தின் நாயகன் விஜய்யை, மாளவிகா எதற்காக சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார் என்பதற்கு அந்தக் காட்சி சரியானதாக இருந்திருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அத்தனை உதவி இயக்குனர்கள் இருந்தும் காட்சி படமாகும் போது கவுரி சிரித்ததை யாருமே கவனிக்கவில்லையா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அந்தக் காட்சியில் நிற்கும் வேறு ஒருவரின் 'இன்சர்ட்' காட்சி போட்டுக் கூட அப்படியே படத்தில் வைத்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யாமல் தற்போது நீக்கப்பட்ட காட்சியாக வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.
இருந்தாலும் இந்தக் காட்சி யு டியூப் டிரென்டிங்கில் தற்போது வரை முதலிடத்திலும் 6 மில்லியன் பார்வைகளை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.