இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமாவில் காதல் படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் கவுதம் மேனன். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்தப் படமே மிகவும் தாமதமாக வெளியாகியது.
அவர் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் ஆரம்பித்து சில பல வருடங்கள் ஓடிவிட்டது. அந்தப்படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. மற்றும் ஜோஷ்வா என்ற படத்தையும் கவுதம் இயக்கி வருகிறார். அவரது அடுத்த வெளியீடாக இந்தப் படம் வேண்டுமானால் வெளிவரலாம்.
தான் இயக்கும் திரைப்படங்கள் கால தாமதாவதைக் கருத்தில் கொண்டுதான் கவுதம் மேனன் குறும்பட இயக்குனராகிவிட்டார் போலிருக்கிறது. கடந்த வருடம் கொரானோ பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் கடந்த மே மாதம் சிம்பு, த்ரிஷா நடித்த கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி அதை யு டியூபில் வெளியிட்டார். நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும் அந்தக் குறும்படத்திற்கு இதுவரையிலும் 78 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது.
அதற்கடுத்து ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி படத்தில் அவருடன் நானும் - அவளும் நானும் என்ற குறும்படத்தை இயக்கினார். அதற்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியான மற்றுமொரு ஆந்தாலஜி வகைப் படமான பாவக் கதைகள் படத்தில் வான்மகள் என்ற குறும்படத்தை இயக்கி நடித்தார்.
தற்போது தியேட்டர்களில் இந்த வாரம் 12ம் தேதி வெளியாக உள்ள குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் ஒரு குறும்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
தான் இயக்கி வரும் இரண்டு முழுநீளத் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே நான்கு குறும்படங்களை இயக்கி முடித்து அவற்றை வெளியிட்டும் விட்டார் கவுதம் மேனன். அந்த வேகம் அவரது திரைப்படங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.