ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய படம் விஜய்யின் மாஸ்டர். கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போய், இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. அதில் மாணவர்களின் பிரச்சினைக்காக விஜய் எப்படி குரல் கொடுக்கிறார் என்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆரம்பக் காட்சியில் விஜய் ஏன் அந்த இரு மாணவர்களை துரத்தி துரத்தி அடிக்கிறார் என்ற குழப்பம் படம் பார்த்த பலருக்கும் இருந்தது. அதற்கான விடை நீக்கப்பட்ட அந்த காட்சிகளில் உள்ளது. அதோடு படத்தில் ஏன் விஜய்யை மாணவர்கள் அப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கும் இந்தக் காட்சிகளே பதில்.
ஏற்கனவே படம் மிகவும் நீளமானதாக இருந்ததால் இந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கி விட்டார்கள் போலும். ஆனாலும் தற்போது வெளியாகி இருக்கும் இந்த நீக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது அந்த ஐந்து நிமிடக் காட்சிகள்.
இதைப் போய் படத்தில் இருந்து ஏன் நீக்கினீர்கள்? என செல்லமாக லோகேஷ் கனகராஜிடம் கோபித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.