திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

சர்ச்சைக்குரிய படங்கள் எடுத்து அதை வியாபாரமாக்கி கலெக்ஷன் பார்ப்பது தான் ராம்கோபால் வர்மாவின் ஸ்டைல். என்.டி.ராமராவின் வாழ்க்கை, தாவுத் இப்ராஹிமின் வாழ்க்கை, ஐதராபாத்தில் நடந்த ஆணவக்கொலை என பரபரப்பாக படம் இயக்கியவர் அடுத்து இயக்கி உள்ள படம் தான் திஷா என்கவுண்டர்.
தெலுங்கானாவில் ஐதராபாத் அருகே 2019ம் ஆண்டு பணிக்கு சென்று விட்டு மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்த இளம் கால்நடை மருத்துவரை சமூக விரோதிகள் 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றார்கள். இந்த படுபாதக செயலை செய்த 5 பேரும் அந்த இடத்திலேயே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திஷா என்கவுண்டர் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராம்கோபால் வர்மா அலுவலகம் முன் பெண்கள் சங்கத்தினரும் போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் திஷா என்கவுன்டர் படத்தை தணிக்கை குழுவுக்கு ராம்கோபால் வர்மா அனுப்பினார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் சர்ச்சை காட்சிகள் உள்ளதாகவும், பாலியல் பலாத்கார கொடுமையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதாகவும் கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு ராம்கோபால் வர்மா அனுப்பி உள்ளார்.