சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! |
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள அந்தாலஜி வகை படம் 'குட்டி ஸ்டோரி'. இதனை கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கி உள்ளனர். இதில் கவுதம் மேனன், அமலாபால், மேகா ஆகாஷ், சுஹாசினி, வருண், சங்கீதா, சாக்ஷி, விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்துள்ளனர். படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இயக்குனர்கள் தங்கள் படம் பற்றி கூறியதாவது:
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்: நான் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது. இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம். நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது. என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன். கதாநாயகியாக அமலா பால் நடித்து உள்ளார் . முதலில் நான் நடிப்பதாக இல்லை அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன். படம் நன்றாக வந்துள்ளது.
விஜய் : முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது. மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது. இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக்கொடுத்தார் நான் 7 நாட்களில் இந்த கதையை படமாக்கினேன். முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம்.
வெங்கட் பிரபு : முதலில் நாங்கள் 4 பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது.
நலன் குமாரசாமி : லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது. எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இந்த கதையை எழுதியவுடன், என் நண்பர் விஜய் சேதுபதி இடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன். அவர் எனக்கு இந்த கதை பிடித்துள்ளது, நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார். 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.