சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் | ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் படம் | ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமில்லை: சேது அபிதா திடீர் விளக்கம் | பிளாஷ்பேக்: 'உயிருள்ளவரை உஷா' கங்காவின் சோக கதை | அடுத்தடுத்து 'பயோபிக்' படங்களில் தனுஷ் | பிளாஷ்பேக்: 5 படங்களை இயக்கிய ஆடியோகிராபர் | பிரபாஸுக்கும் ஜோடி பவன் கல்யாணுக்கும் ஜோடி ; அறிமுக நடிகைக்கு ஜாக்பாட் | அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் ? | 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல் | பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன் |

உலகெங்கிலும் தன் காந்தக் குரலால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் எஸ்பிபி. கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எஸ்பிபியின் மறைவு திரையுலகப் பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்நிலையில் எஸ்பிபி மரணத்திற்கு முன்பு கடைசியாகப் பாடிய பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தேவதாஸ் பார்வதி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள என்னோட பாஷா என்கிற பாடலைத்தான் அவர் கடைசியாக பாடியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன். இந்த தேவதாஸ் பார்வதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.




