ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடக்கும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்ததால் விழா தள்ளிவைக்கப்பட்டு வருகிற 18ந் தேதி தொடங்கி 25ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்காக 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளது.
இந்த விழாவை நடத்தும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இந்த நிதியை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்பட உலகுக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்திட 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, 2018ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். 2019ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
அந்த வகையில், தற்போது சென்னையில் நடைபெறவுள்ள 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதல்வர் இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் வழங்கினார்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.