Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாங்கள் போடும் பாடலை கேட்பதே உங்கள் தலையெழுத்து : இளையராஜா

03 பிப், 2021 - 22:20 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-New-studio-opened-at-chennai

சென்னை : ‛‛மழை கொட்டும் நேரத்தில் கொட்டும் அது எப்படி கொட்டும் என சொல்லமுடியுமா? அப்படித்தான் பாடலும் அந்தந்த சமயத்திற்கு ஏற்றபடி பாடல் உருவாகும். அதை கேட்பதே உங்கள் தலையெழுத்து, என இளையராஜா கூறினார்

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை திறந்தார். முதல் பாடலாக வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு ஒலிப்பதிவு செய்தார். வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.



பின் இளையராஜா அளித்த பேட்டி: பன்மொழிப்படங்கள் தயாராகும் சென்னையில் இருந்தத ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக விஜயா வாஹினி இருந்தது. அந்த ஸ்டூடியோ இன்று இல்லை. ஜெமினி, சாரதா, கோல்டன், ஏ.வி.எம்., ஸ்டூடியோ, விஜயா கார்டன் என பல ஸ்டூடியோக்கள் இன்று இல்லை. இந்த வரிசையில் பிரசாத் ஸ்டூடியோவும் சேர வேண்டும் என வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி, ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளேன். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளது. அதன் பின் பாடல் ஒலிப்பதிவு முழுவீச்சில் தொடர்ந்து நடக்கும்.



கடந்து வந்த வாழ்க்கைக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது. சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. அது இப்படித் தான் கொட்டும் என சொல்ல முடியுமா? எந்தச் சமயத்தில் இசை எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அதுதான் அவர்களின் தலையெழுத்து; மாற்ற முடியாது.



இன்றைய காலத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவமில்லை. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல்கள் ரசிகர்களைப் பிடித்து இழுக்க வேண்டும்.

இவ்வாறு, இளையராஜா கூறினார்.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
கணவர் நடிக்கும் மலையாள ரீமேக்கை இயக்குகிறார் ஜீவிதாகணவர் நடிக்கும் மலையாள ரீமேக்கை ... எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு எம்.ஜி.ஆரின் பாதுகாவலர், நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

Aarkay - Pondy,இந்தியா
22 பிப், 2021 - 09:47 Report Abuse
Aarkay பாடல் நன்றாக இல்லையென்றால் ரசிகன் தூக்கியெறிந்துவிடுவான். அடக்கம் அமரருள் உய்க்கும். தலைக்கனம் பாதாளத்தில் வீழ்த்திவிடும்.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05 பிப், 2021 - 15:30 Report Abuse
N Annamalai வாழ்த்துக்கள் .இன்னும் பெரிய சிகரத்தை எட்ட வேண்டும் .
Rate this:
Sathish kumar - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05 பிப், 2021 - 02:06 Report Abuse
Sathish kumar Thalai eluthu for you only sir....we have more options to skip the songs...first learn to speak in public n respect others....u r good in music but nothing in real life...
Rate this:
Raja - chennai,இந்தியா
08 பிப், 2021 - 18:17Report Abuse
Raja. அவர் சொன்னது தத்துவார்த்த அடிப்படையில் - என் பாடல்களை கேட்க வேண்டும் என்பது உங்கள் தலை எழுத்து என்று தன்னை சிறுமை படுத்திகொண்டு தன் இசையை சிறுமைப்படுத்திக்கொண்டு, இதன் அர்த்தம் கூட புரியாமல் வந்துவிட்டீர் (...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
22 பிப், 2021 - 09:51Report Abuse
Aarkayதலைக்கனம் வந்தாலே முகவரி தொலைந்துவிடும். என்னைக்கேட்டால், திரைப்படங்களுக்கு ஒவ்வாத பாடல்களே தேவையில்லை என்பேன் Most of the times, they only serve as dampeners, disrupting the flow of the story and the theme. ஆல்பங்கள் போறும்....
Rate this:
Sathish kumar - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
05 பிப், 2021 - 02:02 Report Abuse
Sathish kumar illayaraja sir succeed in his professional life but failed in behaviour in front of press meet, function speech etc...sir your speech really hurts..." Thalai eluthu" sir now we have more options to change the songs...its only for you "ThAlAi...eLuThU"...
Rate this:
sam - Alaska,யூ.எஸ்.ஏ
04 பிப், 2021 - 19:22 Report Abuse
sam For the last 40 yrs, he has earned all money from prasad studio. Now complaining about the studio. All kinds of bad words are coming from my mouth.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
05 பிப், 2021 - 05:28Report Abuse
meenakshisundaramசிலருக்கு நாற்றமே நறுமணமாக அமைந்து விடும் .கடவுளின் அமைப்பில் அப்படி சிலர் உள்ளனர் .மேலான இசையை ரசிக்க நல்ல உள்ளங்களால் மட்டுமே முடியும் இதை காசு எங்கே வருகிறது?...
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in