ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

'பிக் பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் போவதற்கு முன்பே டிவி சீரியல்கள் மூலம் ஓரளவிற்குப் பிரபலமானவர் ஷிவானி. இளம் வயதிலேயே முக்கிய டிவிக்களில் சில தொடர்களில் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் புகைப்பட போட்டோக்களைத் தொடர்ந்து பதிவிட ஆரம்பித்து கொஞ்சம் அதிர்ச்சியூட்டினார். தினமும் விதவிதமாக புகைப்படங்களை அவர் பதிவிடுவதை பாலோ செய்வதற்கும் லைக்குகளைப் போடுவதற்கென்றும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வார காலமாக டைட்டில் வின்னரான ஆரியைப் பற்றித்தான் அதிக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிக் பாஸ் வீட்டிலும் தாங்கள் அணிந்த கிளாமர் ஆடைகளாலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஷிவானி, ரம்யா பாண்டியன் ஆகியோரில் ஷிவானி மட்டுமே மீண்டும் இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்களைப் பகிர ஆரம்பித்துள்ளார். அதிலும் கிளாமர் மிஸ்ஸிங் என்பதுதான் ஆச்சரியம். ஆனாலும், ரம்யா மீண்டும் ஆரம்பிக்காமலேயே இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டுக்குப் போய் வந்த பிறகு இருவருமே மாறிவிட்டார்களோ ?.