தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றவர் தமன். அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் காரணமாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்று வருகிறார்.
அடுத்து சிரஞ்சீவி நடிக்க உள்ள 'லூசிபர்' தெலுங்கு ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தமிழில் சில வெற்றிப் படங்களைக் கொடுத்த மோகன்ராஜாதான் அப்படத்தின் இயக்குனர். மற்ற நடிகர்கள், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இசையமைக்கும் வாய்ப்பை யார் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸுக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. முதல் முறையாக சிரஞ்சீவி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள தமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
“எந்த ஒரு இசையமைப்பாளருக்கு பெரும் கனவான ஒரு விஷயம். நமது பாஸ் சிரஞ்சீவி சார் மீது நான் எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளேன் என்பதைக் காட்டக் கூடிய சந்தர்ப்பம். சிரஞ்சீவி சார், சகோதரர் மோகன் ராஜா ஆகியோருடன் எங்களது இசைப்பயணத்தை ஆரம்பித்துவிட்டோம்,” என மகிழ்வுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாய்ப்பைப் சரியாகப் பயன்படுத்தி காப்பி அடிக்காமல் இசையமையுங்கள் என குறும்புக்கார சிரஞ்சீவி ரசிகர்கள் அதில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.