அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா |
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் தனது நடிப்பால் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. தன்னுடைய 43வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். பலருடைய வாழ்த்துகளுக்கு தன்னுடைய நன்றியைப் பகிர்ந்தார் விஜய் சேதுபதி.
டுவிட்டரில் சில ரசிகர்களின் பதிவுகளையும் ரிடுவீட் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் டிசம்பர் 23, 2010 அன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேஸ்புக்கில் இட்ட பதிவை ஒரு ரசிகர் நேற்று டுவீட் செய்ததைத்தான் விஜய் சேதுபதி ரிடுவீட் செய்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் அந்த பேஸ்புக் பதிவில், “தென்மேற்கு பருவக்காற்று' நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருக்கிறேன், வாழ்த்துகள் விஜய், திரையில் கலக்கவும்” என பதிவிட்டிருக்கிறார். அதற்கு ஒருவர், “யார் விஜய் சேதுபதி ?,” கமெண்ட் பதிவிட, பதிலுக்கு கார்த்திக் சுப்பராஜ், “அவரை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என பதிலளித்துள்ளார்.
'தென்மேற்கு பருவக்காற்று' படம் வெளியாவதற்கு முன்தினமே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்பதை கார்த்திக் சுப்பராஜ் கணித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான 'பீட்சா' படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதிதான். அப்படம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் இருவரும் “இறைவி, பேட்ட” ஆகிய படங்களிலும்
இணைந்துள்ளனர். இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு குறும்படங்களில் இணைந்து பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய் சேதுபதி மட்டுமல்ல, கார்த்திக் சுப்பராஜும் இன்றைய ரசிகர்களின் மனதில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.