ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இந்திய அளவில் கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் பரவ ஆரம்பித்தது. உடனடியாக நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களையும் மூடினார்கள். தமிழ்நாட்டில் நவம்பர் 10ல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதன்பின் வெளிவந்த சாய்தரம் தேஜ் நடித்த 'சோலோ பிராதுக்கே சோ பெட்டர்' படம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது.
அடுத்து பொங்கலை முன்னிட்டு கடந்த வாரமே வெளிவந்த ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் நடித்த 'கிராக்' படம் குறிப்பிடத்தக்க வெற்றியையும், லாபத்தையும் பெற்றுள்ளது. அது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'கிராக்' படம் வெளியான அன்று சில பிரச்சினை காரணமாக பகல் காட்சிகளில் வெளியாகவில்லை. மாலை மற்றும் இரவுக் காட்சிகளில்தான் வெளியானது. ஆனால், படம் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்ததால் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
வாங்கிய விலையை விட இரு மடங்கு லாபடத்தை இந்தப் படம் கொடுக்கும் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 2021ம் ஆண்டின் முதல் படமே பெரிய வெற்றியாகி தெலுங்குத் திரையுலகினருக்குக் கொடுத்த மகிழ்ச்சியை விட அப்படத்தின் இயக்குனர் கோபிசந்த் மலினேனி, நாயகன் ரவி தேஜா, நாயகி ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
அவர்களுக்கு இந்தப் படம் ஒரு 'கம்-பேக்' படமாக அமைந்ததுதான் அதற்குக் காரணம்.