மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் லூசிபர்.. மோகன்லால் நடித்த இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறிய பிரித்விராஜ், அந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்குனர் மோகன்ராஜா ரீமேக் செய்கிறார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்தநிலையில் லூசிபர் படத்தின் கதையிலும், கதாபாத்திரங்களிலும் சில மாற்றங்களை செய்துள்ளாராம் மோகன்ராஜா. குறிப்பாக மோகன்லாலின் வலது கையாக நடித்திருந்த சயீத் மசூத் என்கிற பிரித்விராஜின் கதாபாத்திரமே தெலுங்கு ரீமேக்கில் இடம் பெறாதவாறு தூக்கிவிட்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேரக்டரில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணோ அல்லது ஏதோ ஒரு இளம் முன்னணி நடிகரோ நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த கதாபாத்திரமே நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த அந்த கதாபாத்திரம் பல இடங்களில் மோகன்லாலை டாமினேட் செய்வது போல உருவாக்கப்பட்டிருந்தது. மோகன்லாலும் சரி, அவரது ரசிகர்களும் சரி அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அது டேமேஜ் செய்யும் வாய்ப்பு இருப்பதால், அவரது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் தான் மோகன்ராஜா அதை நீக்கி விட்டார் என்றே தெரிகிறது.