இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
ஒரு திரைப்படத்தில் தவறு நடந்தால், அநியாயம் நடந்தால் அதில் ஹீரோ தட்டிக் கேட்பார். ஆனால், அதே படம் தியேட்டர்களில் வெளியாகும் போது அநியாய விலைக்கு அந்தப் படத்தின் டிக்கெட் கட்டணம் இருந்தால் அதில் நடிக்கும் ஹீரோக்கள் தட்டிக் கேட்கவே மாட்டார்கள். இதுதான் நிழல் ஹீரோக்களின் நிலை.
விஜய் நடித்து நாளை மறுதினம் வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடிக்கிறார். மாணவர்களுக்கு நல்லதைக் கற்றுத் தரும் ஒரு கதாபாத்திரம். அதாவது அது நிழல். நிஜத்தில் அதே 'மாஸ்டர்' படத்தின் டிக்கெட் கட்டணம் 1000, 2000 என தியேட்டர்களில் பிளாக்கில் விற்கப்படுவதாகத் தகவல். உபதேசம் என்பது திரையில் மட்டும்தான், நிஜத்திற்கு அல்ல என்பதை அனைத்து சினிமா ஹீரோக்களும் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள்.
கொரோனா தொற்று தளர்வுகளுக்குப் பிறகு வெளிவரும் முதல் பெரிய திரைப்படம் 'மாஸ்டர்'. கொரோனா பயத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லை என்பதுதான் கடந்த இரண்டு மாதத்திய நிலை. ஆனால், 'மாஸ்டர்' படத்திற்கு டிக்கெட்டுகளுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கிறதாம். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதே அதற்குக் காரணம்.
பலரும் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கத் தயாராக இருக்கிறார்களாம். எனவே, ரசிகர் மன்றக் காட்சிகள் என்ற போர்வையில் சில தியேட்டர்களிலேயே 1000, 2000 என விற்கப்படுகிறதாம். மேலும், ஒரு நாளைக்கு 6 காட்சிகள் வரை படத்தைத் திரையிட ஏற்பாடு நடக்கிறதாம்.
100 சதவீத அனுமதியிலிருந்து அரசு பின்வாங்கி 50 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கியது. எனவே, டிக்கெட் கட்டண விவகாரத்தில் கண்டும் காணாமல் அரசு தரப்பு இருக்கிறது என்கிறார்கள்.