என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்து வரும் சமந்தா, தனது பர்சனல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ள சமந்தா, தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி அவருடன் எடுத்துக் கொண்டுள்ள ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, ஆன்மிகம் குறித்த ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ஆன்மிகத்தில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து ஒரு மகத்தான அனுபவத்தை உணர்வதே ஆகும். உங்களது அறியாமையின் விளைவாக உங்களை உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்தில் இருந்து உங்களை நீக்கிக் கொண்டு ஒரு நல்ல படைப்பாளியாக உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வதுதான் ஆன்மிகம். இது முற்றிலும் ஆனந்தமான எல்லையற்ற பொறுப்பு.
அறிவு மட்டுமே சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் வெளிப்புறத் தோற்றத்தை தருகின்றன. ஆனபோதும் நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையிலேயே அறிவொளியை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.