பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமாமோகன் உள்பட பலர் நடித்துள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரின் தொடக்கத்தில் அமைதிப்படை அமாவாசையை நினைவுபடுத்தும் வகையில் கண்களை சிமிட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
அதையடுத்து அவருக்கும் பார்த்திபனுக்குமிடையே நடக்கும் வார்த்தை போரை வைத்து அவர்கள் இருவருக்குமிடையிலான மறைமுகப்போர்தான் இந்த துக்ளக் தர்பார் என்பது தெரிகிறது. எவனோ ஒருத்தன் கூட இருந்தே என்னை யூஸ் பண்றான். நல்லா வச்சு செய்றான் என்று பார்த்திபனை மறைமுகமாக போட்டுத்தாக்குகிறார் விஜய் சேதுபதி. அதற்கு பார்த்திபன், நமக்கு தெரியாத ஒருத்தன். ஆனால் நம்ம விசயத்தை நன்றாக தெரிந்த ஒருத்தன். யார் அந்த நாலாவது ஆள்? என்று விஜய் சேதுபதியை, அவரிடத்திலேயே கேட்கிறார்.
இறுதியில், எப்படியென்றாலும் நீங்கள் என்னை சும்மா விடமாட்டீங்க. அதனால நானும் உங்களை சும்மா விடுறதா இல்ல. வாங்களேன் நேரடியாக மோதிப்பார்ப்போம் என்று பார்த்திபனை அதிரடியாக ஆக்சனுக்கு விஜய் சேதுபதி அழைக்கும் டயலாக்கும் துக்ளக் தர்பார் டீசரை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த டீசரை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.