லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் பரவியதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகள் செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர் நடிகர் சோனு சூட். புலம் பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல, பேருந்துகள், விமானப் பயணம் என பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தார்.
அது போல மும்பை ஜுஹு பகுதியில் உள்ள அவருடைய ஆறு மாடி கொண்ட வீட்டை டாக்டர்கள் தங்குவதற்காக வசதிகளைச் செய்து கொடுத்தார். மக்கள் வசிக்கும் இடத்தை வணிகப் பயன்பாடு இடமாக அவர் மாற்றியது தவறு என அவர் மீது காவல்துறையிடம் மும்பை மாநகராட்சி புகார் தெரிவித்துள்ளதாம். அது குறித்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
கங்கனா ரணவத் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக மும்பை மாநகராட்சியும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுத்தது போல சோனு சூட் மீதும் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள் என பாஜக எம்எல்ஏ-வான ராம் கதம் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணவத் அலுவலகத்தை இடித்த விவகாரம் சர்ச்சையானது போல, சோனுசூட் விவகாரமும் சர்ச்சையாகும் எனத் தெரிகிறது.