காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சினிமா உலகில் அடிக்கடி பல காதல் கிசுசுக்கள் வருவதுண்டு, போவதுண்டு. அந்த காதல் கிசுகிசுக்கள் பல சமயங்களில் உண்மையாக முடிவதுண்டு. தென்னிந்தியத் திரையுலகை விட ஹிந்தித் திரையுலகில் பல காதல் கிசுகிசுக்குள் அதிகமாகவே வரும்.
தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் - ஆலியா பட், சித்தார்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி காதல்தான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர்களுடன் சேர்ந்து மேலும் ஒரு காதல் ஜோடி இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் ஆர்யன் கார்த்திக் ஜோடிதான் அந்த புதிய காதல் ஜோடி. இருவரும் இணைந்து தற்போது 'தோஸ்தானா 2' படத்தில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு மும்பைக்கு ஜோடியாகத் திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களை 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்கள் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார்களாம்.
ஊருலகத்திற்கு தாங்கள் காதலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளவே இருவரும் ஜோடியாகத் திரும்பியதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.