அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம் இவர்களுடன் அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமாகி நடைபெற்றது. கடந்த வருட ஜனவரி மாதம் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தினார்கள். அதன்பின் ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் வரை நடத்தினார்கள்.
மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெறாத படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் ஹைதராபாத் வந்து தங்கியுள்ளாராம்.
தொடர்ந்து ஒரு மாத காலம் தங்கியிருந்து அவருடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளாராம். இதன்பின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கும் எனத் தெரிகிறது.