எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்திருந்த இந்தப்படம் அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மற்றும், இந்தியிலும் மட்டுமல்லாது சீன மொழியிலும் கூட ரீமேக் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணி தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழ்நிலையில் தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன-5 முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிட கேரள அரசு அனுமதித்து உள்ள நிலையில் த்ரிஷயம் படக்குழுவினரிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்பதால் எதிர்பார்த்த வசூலையும் லாபத்தையும் ஈட்டமுடியாது என்பதால் ஒடிடியில் படத்தை வெளியிடும் முடிவை எடுத்துள்ளனராம்.