மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் |
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தனது ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார்.. வரும் ஜன-13ம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
“இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தான், விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரது காட்சிகளையும் படமாக்கினேன். அந்த 18 நாட்கள் படப்பிடிப்பில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஆழமான நட்பு தான், விஜய்சேதுபதி விஜய்க்கு கொடுத்த அன்பு முத்தமாக வெளிப்பட்டது. அதேபோல இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது நான் நடிக்க வேண்டும் என விஜய் வற்புறுத்தினார்.. அப்படியானால் அந்த காட்சியை நீங்கள் தான் இயக்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.. அதற்கு சம்மதித்து, நான் நடித்த காட்சியை விஜய் இயக்கினார். மொத்தத்தில் இந்தப்படம் 50 சதவீதம் விஜய் படமாகவும் 50 சதவீதம் என்னுடைய மேக்கிங் ஸ்டைலிலும் இருக்கும்” என கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.