ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

விஜய்சேதுபதி நடித்த, சீதக்காதி படத்தின் பெயரை மாற்றக் கோரி, இந்திய தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
விஜய்சேதுபதி, அர்ச்சனா நடிக்க, பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள, சீதக்காதி படம், வரும், 20ம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என, இந்திய தேசிய லீக் கட்சி கோரியுள்ளது.அக்கட்சியின் அறிக்கை:சீதக்காதி தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்தவர். இஸ்லாமியராக இருந்தாலும், அனைத்து மக்களுக்காகவும், மனித நேயத்திற்காகவும் வாழ்ந்தவர், அப்துல் காதர் என்ற சீதக்காதி.
இவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும், எவ்வித நடவடிக்கையையும், இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது. விஜய் சேதுபதி, நல்ல நடிகர். சீதக்காதி என்ற, படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.