ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தவம். புதுமுகம் வசி என்பவர் தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், சிங்கம் புலி, சந்தான பாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, செங்கல் ராவ், அர்ச்சனா சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆனந்த், சூரியன் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். படம் பற்றி அவர்கள் கூறியதாவது:
கதையின் நாயகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் மகனின் திருமணத்திற்காக 7 நாள் சுற்றுலா பயணமாக காரைக்குடி வருகிறாள். கதையின் நாயகன் காரைக்குடியில் ஏ டூ இசட் என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும், டூரிஸ்ட் கைடாகவும் இருக்கிறார். ஏழை விவசாயிகளின் வறுமையும் போக்க போராடும் நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருக்கிறார். கதாநாயகன், கதாநாயகி, நடேசன் வாத்தியார் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.
வேர்வை, உழைப்பு, கண்ணீர், அதனால் ஏற்படும் இரத்தம் மற்றும் காதலால் பின்னப்பட்டிருக்கிறது படத்தின் திரைக்கதை. விவசாயத்தின் இன்றைய நிலயையும், விவசாயிகளின் வலியையும் பேசுகிற படம். படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது, பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்கள்.