அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பல திரைப்பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில், இப்படம், கோவாவில் நடக்கும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது. கோவாவில் நவ., 20 முதல் 28-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. உலகெங்கிலும் சுமார் 200 படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் பரியேறும் பெருமாள் தேர்வாகி உள்ளது. இப்படத்துடன் பேரன்பு, டூ-லெட் மற்றும் பாரம் ஆகிய படங்களும் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.