கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” | குஷி குழுவை சந்திப்பாரா விஜய் | பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் | செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் |
இன்றைய இளம் இயக்குனர்கள் தான் ஓடாத படங்களுக்கும் 'சக்சஸ் பார்ட்டி' என குடித்துவிட்டு பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். படம் வெளியான மறுநாளே சக்சஸ் என்று சொல்லிவிட்டு அவர்களது மார்க்கெட்டைத் தக்க வைக்கவும், சம்பளத்தை உயர்த்தவும் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் கூட தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்த படம் ஒன்றிற்கு அதன் நாயகன் 'சக்சஸ் மீட்' வைத்து கொண்டாடிய வரலாறும் உண்டு.
அவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் மூத்த இயக்குனர்கள் கூட 'சக்சஸ் பார்ட்டி' என்ற பெயரில் தண்ணீர் விருந்து அளித்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சில தினங்களுக்கு முன்பு 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு சக்சஸ் பார்ட்டி ஒன்று சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றிருக்கிறது.
அந்த பார்ட்டிக்கு படத்தில் நடித்தவர்கள் மட்டுமல்லாது, அவர்களது நண்பர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பார்ட்டியில் அரை போதையுடன் பலர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. பெண்களுடன் சில நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் அதில் இடம் பெற்றிருப்பது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ஏற்கெனவே, சில நடிகர்கள் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது சிறந்த இயக்குனர் என்று கருதப்படும் மணிரத்னம் இப்படி ஒரு பார்ட்டியை நடத்தியிருக்கிறாரே என திரையுலகத்தில் உள்ளவர்களே வேதனைப்படுகிறார்கள்.