10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

எல்லா நடிகர்களுக்கும் ஒரு இயக்குனர் கனவு இருக்கும். அப்படி தனக்குள்ளிருந்த இயக்குனருக்கு உயிர் கொடுத்து முதன்முதலாக லூசிபர் என்கிற படத்தை மலையாளத்தில் பிரமாண்டமாக இயக்கி வருகிறார் நடிகர் பிருத்விராஜ். மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
கடந்த 2014லேயே டைரக்சன் பண்ணும் முடிவை எடுத்துவிட்ட பிருத்விராஜ், தான் நடித்த 'வீட்டிலேக்குள்ள வழி' என்கிற படத்தின் ரீமேக் ரைட்ஸை முறைப்படி வாங்கி இந்தியில் படம் இயக்குவதற்கு தயாரானாராம். ஆனால் 2௦15ல் சல்மான்கான் நடித்த 'பஜ்ரங்கி பைஜான்' படம் வெளியாகி பிருத்விராஜுக்கு ஷாக் கொடுத்துவிட்டது
காரணம் இரண்டு படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மையக்கருவை கொண்டது என்பது தானாம். அதனால் அப்போதைக்கு டைரக்சனில் இருந்து பின்வாங்கிய பிருத்விராஜ் இப்போது தனது கனவை நனவாக்கி வருகிறார்.