ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
லேடி சூப்பர்ஸ்டார், ஹிந்தி இயக்குனர் வில்லனாக நடித்த கண்ணிற்கும், நேரத்திற்கும் சம்பந்தப்பட்ட படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நான்கே நாட்களில் பதினாறு கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்புத் தரப்பு தகவல்களை கசியவிட்டது. ஆனால், அந்த அளவிற்கு வசூல் இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.
இப்படி படம் வெற்றி என்று சொன்னால்தான் பிறகு எடுக்கும் படங்களுக்கும் பைனான்ஸ் கிடைக்குமாம். அதனால்தான் திரையுலகின் முக்கிய பைனான்ஸ் புள்ளியை விழாவிற்கு அழைத்து சிறப்பித்திருக்கிறார்கள். படக்குழுவினர்கள் அனைவருமே அவரைப் பாராட்டிப் பேசியதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.