ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து நடித்தார் கஞ்சாகருப்பு. ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததோடு அவரது மார்க்கெட்டையும் சரித்து விட்டது. அதனால் சில வருடங்களாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக்கொண்டு வந்த கஞ்சா கருப்புவிற்கு தர்மதுரை, தொண்டன் படங்களுக்குப்பிறகு மீண்டும் புதிய படங்கள் புக்காகி வருகின்றன.
அந்த வகையில், களவாணி படத்தின் முதல் பாகத்தில் சூரியுடன் இணைந்து இரண்டு காமெடியன்களில் ஒருவராக நடித்த கஞ்சா கருப்பு, இப்போது களவாணி-2 படத்தில் நடிக்கிறார். இவருக்கான காமெடி டிராக்கில் அதிகப்படியான காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
அதேப்போல் சண்டக்கோழி-2, நாடோடிகள்-2 படங்களிலும் காமெடியனாக கலக்குகிறாராம் கஞ்சாகருப்பு. ஆக, இந்த படங்களில் அவர் கமிட்டான பிறகு மேலும் பல புதிய படங்கள் புக்காகி தற்போது மீண்டும் பிசியான காமெடியனாகி விட்டார் கஞ்சா கருப்பு.




