'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'என்டிஆர்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பெரிய நடிகர்கள், நடிகைகளை படத்திற்குள் கொண்டு வருதை படத்தின் இயக்குனர் கிரிஷ், படத் தயாரிப்பாளர்கள் செய்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள்தான் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம்.
ஏற்கெனவே ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்டிஆர், ஜெயப்பிரதா இருவரும் இணைந்து நடித்து 1977-ல் வெளிவந்த 'அட்வி ராமுடு' படம் பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. இந்த ஜோடி பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாகத் தயாராகி வரும் இப்படத்தை 2019 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.