தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
பேய் பட சீசன் இன்னும் முடியவில்லை. புதிதாக படம் எடுக்க வருகிறவர்களும் பேய் படத்துக்கு மினிமம் கியாரண்டி இருப்பதாக நினைத்து பேய் படம் தான் எடுக்கிறார்கள். அப்படி ஒரு படம் தான் மாயா பவனம். ஹம் ஷம் ஸ்டூடியோ சார்பில் ஓம் ஸ்ரீ கண்ணாஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார். அவரே நடித்தும் இருக்கிறார். அவருடன் ஆத்மா, பாலயோகி, அப்பன்ராஜ், மம்தா, ராஹீத் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். என்.பி.பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜ் பாஸ்கர் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கண்ணாஜி கூறியதாவது:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்லிக்கோட்டை ஜமீனில் சந்திரகாந்தன் என்ற மருத்துவர் இருந்தார். அவர் தன் இறந்து போன காதலி பிணத்தை வைத்துக் கொண்டு அதற்கு உயிர்கொடுக்க மருந்து கண்டுபிடிக்க ஆராயச்சி செய்கிறார். இதை விரும்பாத ஜமீனும், ஊர்மக்களும் காதலியின் பிணத்தை எரித்து விடுகிறார்கள். அவள் மீது தீராக் காதல் கொண்ட சந்திரகாந்தன் தற்கொலை செய்கிறான். பின்பு ஆவியாகி ஊர் மக்களையும், ஜமீனையும் பழிவாங்குகிறார். இதனால் சக்திமிக்க மந்திரவாதிகளை கொண்டு அந்த ஆவியை ஒரு கலயத்தில் அடைத்து மாயா பவனத்தில் புதைத்து வைக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு காதலர்களால் தவறுதலாக அந்த கலயம் திறக்கப்படுகிறது. சந்திரகாந்தன் மீண்டும் வெளியே வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. கிராபிக்ஸ் காட்சிகளுடன் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. படத்தை வெளியிட்ட பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறோம் என்றார் கண்ணாஜி.