'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
யோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க, சிறிது நேரம் ஒதுக்குவாரா என, நடிகர், பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், 53, டுவிட்டர் சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரிய தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி, யோகா, உடற்பயிற்சி என, மிகவும் பிசியாக உள்ளார். டில்லியில், முதல்வருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, பிரதமர் சிறிது நேரம் ஒதுக்க முடியாதா; இதன் மூலம், தன் கடமையை அவர் நிறைவேற்றலாமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அதிருப்தி தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹாவும், டில்லி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.