சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வைதேகியாக நடித்தவர் பிரமிளா ஜோஷி, தப்புத் தாளங்கள் படத்தில் சரிதாவின் கணவராக நடித்தவர் சுந்தர் இவர்களின் மகள் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். கன்னடத்தில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்தார். சிரஞ்சீவி சார்ஜா நடிகர் அர்ஜுனின் உறவினர்.
ஆரம்பத்தில் இவர்கள் காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்கவில்லை. இதனால் 3 வருடங்கள் வரை காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று காலை பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கன்னட மற்றும் மலையாள திரையுலக பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.