'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

போடா போடி படத்துக்குப் பிறகு வரலட்சுமியின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகவே இல்லை. பல ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நிறைய படங்கள் தேடி வருகின்றன.
சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என சுமார் 10 படங்களை கையில் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தேடிவரும் படங்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்புவதில்லையாம். நல்ல கேரக்டர் வந்தால் சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஓகே சொல்லிவிடுகிறாராம் வரலட்சுமி.
லேட்டஸ்ட்டாக அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் கதை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.




