ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானத்திற்கு கதாநாயகனாக முதல் வெற்றிப் படமாக அமைந்தது. சந்தானத்தை டிவியில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ராம் பாலா தான் பெரிய திரையிலும் சந்தானத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
அந்தப் படத்திற்குப் பின் சந்தானம் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படம் தோல்வியைத் தழுவியது. மேலும் சந்தானம் தற்போது நடித்து முடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை. மேலும் அவர் நடித்து வரும் 'ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்தப் படங்களின் வெளியீடு குறித்தும் தகவல் இல்லை.
இதனிடையே, சந்தானம் மீண்டும் ராம்பாலாவுடன் இணைந்து 'தில்லுக்கு துட்டு 2' படத்தை ஆரம்பிக்க உள்ளார் என்று ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று ஐதராபாத்தில் அப்படம் ஆரம்பமானது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.




