பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

எம்.ஜி.ஆர் நடித்த புதிய பூமி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் வி.சி.குகநாதன். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். 249 படங்களில் பணியாற்றி உள்ளார். பெப்சி தலைவராக பணியாற்றிய வி.சி.குகநாதன் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் பணியாற்ற வந்திருக்கிறார். 3 படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவற்றில் அல்வா தின்ன ஆசையா என்ற படமும் ஒன்றும்.
சாய் சிவா இதனை இயக்குகிறார். கிளாமர் சினி கைடு நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுகங்களுடன் யோகிபாபு, வையாபுரி, சிங்கம்புலி, ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். தேவா இசை அமைக்கிறார். முழுநீள காமெடி படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடக்கிறது.