தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தமிழ் சினிமாவில் தங்களது படங்களால் கவனிக்க வைக்கும் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர்கள் பாலா, மிஷ்கின், ராம், ராஜு முருகன் என சிலர் மட்டுமே கமர்ஷியல் சினிமாக்களில் இருந்து மாறுபட்டு கொஞ்சமாவது மாற்று சினிமாவைக் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் வரிசையில் இன்னும் பலர் இப்போது சேர்ந்து வருகிறார்கள்.
தாங்கள் இயக்கிய படங்களை விமர்சனங்களுக்குரிய படங்களாக எடுத்த இயக்குனர்களான மிஷ்கின், ராம் இருவருமே இதற்கு முன் அவர்கள் இயக்கிய படங்களில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் அவர் இயக்கிய 'நந்தலாலா' படத்தில் நாயகனாக நடித்தார். ராம் அவர் இயக்கிய 'தங்க மீன்கள்' படத்தில் நாயகனாக நடித்தார். இயக்கத்தோடு நடிப்பிலும் அவர்கள் தனி முத்திரை பதித்த படங்கள் அவை.
அப்படிப்பட்ட இரண்டு இயக்குனர்கள் இப்போது நாயகனாகவும், வில்லனாகவும் மோதிக் கொள்ளும் 'சவரக்கத்தி' படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் மிஷ்கின் தம்பியான ஜி.ஆர். ஆதித்யா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
“சீரியசான படங்களைக் கொடுக்கும் இரண்டு இயக்குனர்கள் நடிக்கும் படம் என நினைத்து விடாதீர்கள். இது முற்றிலும் கலகலப்பான படம். பொய்யையே சொல்லி சுற்றித் திரியும் ராம், எதற்கெடுத்தாலும் கோபம் அடையும் மிஷ்கின் இருவரும் மோதிக் கொள்வது தான் படத்தின் கதை. அதை அவ்வளவு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் ஆதித்யா.