Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கணக்கு காட்டாமல் விஷால் ஓடி ஒளிகிறார் : டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

10 டிச, 2017 - 02:04 IST
எழுத்தின் அளவு:
t.rajendar-against-vishal

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட ரகளை காரணமாக கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடந்த அரங்கத்தில் இருந்து வெளியே வந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டினர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், இன்னும் பொதுக்குழு தொடங்கவில்லை. நான் வீட்டுக்கு சாப்பிட போறேன். ஒரு மணிக்கு சாப்பிடுவது என் வழக்கம் என கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.


பின்னர் தயாரிப்பாளர்கள் சார்பாக டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூட்டம் தாமதமாகவே துவங்கியது. இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இன்று தான் மேடையில் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் தமிழ்த்தாய் பாடப்பட்டுள்ளது. இது பற்றி மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார். சங்கத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு, நிர்வாக செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு கூட மைக் தரப்படவில்லை. ஆனால் சம்பந்தமில்லாதவர்களுக்கு மைக் கொடுக்கிறார்கள்.


கணக்கு கேட்டதற்கும் முறையாக பதில் தரவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பியதற்கும் பதில் சொல்லாமல் விஷால் ஓடுகிறார். சங்கத்தில் ரூ.7 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. தமிழக அரசிடம் முறையாக பேசி இருந்தார் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய சேரன், தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொல்வது நாகரீகமல்ல. 450 உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்காமால் கூட்டத்தை முடித்துவிட்டார். தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்க விஷாலுக்கு தகுதியில்லை என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)